BREAKING: தவெகவுக்கு ஆதரவு கிடையாது.. காலையிலேயே விஜய்க்கு வந்த அதிர்ச்சி செய்தி..!!

By Soundarya on வைகாசி 6, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆதரவு தராது என அக்கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான நகர்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தவெக-வுக்கு ஆதரவு இல்லை என்ற முஸ்லிம் லீக் கட்சியின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

மேலும், தங்கள் கூட்டணியின் தலைமையிலான திமுக-வின் முடிவுக்குத் தாங்கள் எப்போதும் கட்டுப்படுவோம் என அக்கட்சி தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் அசைக்க முடியாத அங்கமாகத் தொடர்வதை உறுதிப்படுத்தும் வகையில், தவெக-வின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்குத் தாங்கள் துணை நிற்கப்போவதில்லை என்பதை காதர் மொகிதீன் இந்த அறிவிப்பின் மூலம் உறுதி செய்துள்ளார்.