இதை கவனிச்சீங்களா..? “TN 07 CM 2026′” GOAT படத்தில் காட்டிய சீக்ரெட் Code… 2026-ல் நிஜமாகப்போகும் விஜய்யின் முதல்வர் கனவு..!!

By Soundarya on வைகாசி 6, 2026

Spread the love

தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மிகக்குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்து, திராவிட அரசியலின் கோட்டையாகத் திகழ்ந்த திமுகவை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது. இந்த மெகா வெற்றிக்கு முன்பே, 2024-ம் ஆண்டு வெளியான ‘தி கோட்’ (GOAT) திரைப்படத்தில் தனது அரசியல் லட்சியம் குறித்த ஒரு சூசகமான தகவலை விஜய் வெளிப்படுத்தியிருந்தது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்படத்தில் அவர் ஓட்டிச் செல்லும் ஒரு காரின் பதிவு எண் ‘TN 07 CM 2026’ (TN – தமிழ்நாடு, CM – முதலமைச்சர், 2026 – ஆண்டு) என்று இடம்பெற்றிருப்பது, அவர் அப்போதே 2026-ல் முதலமைச்சராகும் திட்டத்தில் இருந்ததை உறுதிப்படுத்துவதாக அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

தற்போதைய தேர்தல் முடிவுகளின்படி, 234 இடங்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் 108 இடங்களைக் கைப்பற்றி தவெக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 10 இடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், விஜய்யின் இந்த அதிரடி அரசியல் வருகை ஒட்டுமொத்த இந்திய அரசியலையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. விஜய் தான் போட்டியிட்ட திருச்சி (கிழக்கு) மற்றும் பெரம்பலூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர் விரைவில் பெரம்பலூர் தொகுதியைத் தக்க வைத்துக்கொண்டு திருச்சி (கிழக்கு) தொகுதியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

ஆட்சியமைப்பதற்கான மேஜிக் நம்பரை எட்ட, தற்போது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 5 இடங்களை வைத்துள்ள காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் அமைச்சரவையில் 2 இடங்களைக் கோர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே திரைப்படத்தில் காட்டியபடி 2026-ல் விஜய் முதலமைச்சர் நாற்காலியை அலங்கரிப்பதற்கான அனைத்துக் காய்களும் தற்போது கச்சிதமாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.