விஜய்யுடன் கூட்டணி… ஒரே போடாய் போட்ட பிரேமலதா… காலையிலேயே தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

By Nanthini on வைகாசி 6, 2026

Spread the love

அரசியல் களத்தில் நிலவி வந்த பல்வேறு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தங்கள் கட்சி திமுக கூட்டணியிலேயே நீடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். விருத்தாசலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் தேமுதிக ஆதரவு அளிக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், விஜய் தங்கள் வீட்டுப் பிள்ளை என்றும், புதிதாக அமையவிருக்கும் தவெக ஆட்சிக்கும், தம்பி விஜய்க்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த அதிரடி அறிவிப்பின் மூலம், தேமுதிக தற்போதைக்கு திமுக கூட்டணியிலேயே உறுதியாக இருப்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார், இது வரவிருக்கும் தேர்தல் களம் குறித்த அரசியல் விவாதங்களை மேலும் சூடாக்கியுள்ளது.