“எனக்கு துணை முதல்வர் பதவி வேண்டும்” விஜய்யிடம் பிடிவாதம் பிடிக்கும் புஸ்ஸி ஆனந்த்..? குறுக்கே வரும் சவுமியா அன்புமணி… தவெக-வில் ஆரம்பமான பதவிச் சண்டை..!!

By Soundarya on வைகாசி 6, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவைப் பட்டியல் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், கட்சிக்குள் பல்வேறு பதவிகளுக்கான பெயர்கள் அடிபடுகின்றன. குறிப்பாக, தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் துணை முதல்வர் பதவியைக் கோரியுள்ளதாகவும், ஆதவ் அர்ஜுனா விளையாட்டுத் துறையையும், அருண்ராஜ் நிதித்துறையையும் விரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், செங்கோட்டையன், சி.டி.ஆர்.நிர்மல்குமார், ஜே.சி.டி.பிரபாகரன், ராஜ்மோகன், சத்யபாமா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைப் பெற காங்கிரஸ் மற்றும் பாமக ஆகிய கட்சிகளுடன் தவெக தலைமை தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வழங்க 2 அமைச்சர் பதவிகளை நிபந்தனையாக விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது; இதில் மேலூர் பெ.விஸ்வநாதன் மற்றும் கிள்ளியூர் ராஜேஸ் குமார் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. அதேபோல், பாமக தரப்பில் சவுமியா அன்புமணிக்கு துணை முதல்வர் பதவி கோரப்படுவதாகத் தெரிகிறது. பாமக-வின் 4 எம்எல்ஏக்கள் இன்று பனையூரில் கூடி, அமைச்சரவையில் இணைவது குறித்து இறுதி முடிவு எடுக்க உள்ளனர்.

   

காங்கிரஸ், பாமக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தாலும், பெரும்பான்மைக்கு இன்னும் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவு தவெக-வுக்குத் தேவைப்படுகிறது. இத்தகைய சூழலிலும், மெஜாரிட்டி குறித்த கூடுதல் கவலைகள் ஏதுமின்றி ஆட்சியமைக்கும் பணிகளில் விஜய் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பல்வேறு தரப்பினரின் நிபந்தனைகள் மற்றும் பதவி விருப்பங்களுக்கு மத்தியில், அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு சுமுகமான அமைச்சரவையை உருவாக்குவதே விஜய்யின் தற்போதைய சவாலாக உள்ளது.