“உடலில் ஆங்காங்கே கொழுப்பு கட்டியா? பயப்பட வேண்டாம்.. வீட்டிலேயே கரைக்க இந்த ஒரு மேஜிக் ஜூஸ் போதும்… பல வருட கொழுப்பு கட்டியையும் விரட்டிவிடலாம்”…!!!

By Muthu Mani on வைகாசி 6, 2026

Spread the love

உடலில் தோல் மற்றும் தசை அடுக்கிற்கு இடையில் உருவாகும் கொழுப்பு கட்டிகள் ‘லிப்போமா’ என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக இவை ஆரம்பத்தில் வலியற்றவையாகவும், தொடும்போது நகரக்கூடிய தன்மையுடனும் இருக்கும். கழுத்து, முதுகு, வயிறு, கைகள் மற்றும் கால்களில் இவை அதிகம் தோன்றுகின்றன. நடுத்தர வயதினரிடையே பொதுவாகக் காணப்படும் இந்தக் கட்டிகள், அளவில் பெரிதாகும்போது நரம்புகளை அழுத்தி வலியை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இவற்றை ஆரம்பத்திலேயே கவனிப்பது அவசியம்.

ஆயுர்வேத மருத்துவர் மனிஷ் ஆச்சார்யா பரிந்துரைக்கும் எளிய இயற்கை பானம் மூலம் இந்தக் கட்டிகளைக் கரைக்க முடியும். இதற்குத் தேவையானவை புதினா இலைகள் (10-15), சிறிது கொத்தமல்லி, ஒரு கொத்து கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு மற்றும் 2 கிளாஸ் தண்ணீர். மிக்ஸி ஜாரில் இவை அனைத்தையும் சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து வடிகட்டினால், கொழுப்புக் கட்டிகளுக்கான பிரத்யேக பானம் தயாராகிவிடும்.

   

இந்த பானத்தில் பயன்படுத்தப்படும் மஞ்சள், ‘குர்குமின்’ என்ற சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடண்டைக் கொண்டுள்ளது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மூலம் தோலுக்கு அடியில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது. இதனுடன் சேர்க்கப்படும் புதினா செரிமானத்தை மேம்படுத்தி கொலஸ்ட்ராலை சீராக வைத்திருக்க உதவுவதோடு, உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைத்து குளிர்ச்சி தருகிறது. கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் C சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி கட்டிகளைக் கரைக்கத் தூண்டுகிறது.

   

வீட்டில் இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த மருத்துவப் பானம், கை, கால் என உடலின் எந்தப் பகுதியில் கொழுப்புக் கட்டிகள் இருந்தாலும் அவற்றைச் படிப்படியாகக் கரைக்கும் வல்லமை கொண்டது. எந்தவிதப் பக்கவிளைவுகளும் இன்றி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த முறையைத் தொடர்ந்து பின்பற்றி வரும்போது, கட்டிகளின் அளவு குறைவதை உணர முடியும். எளிமையான வீட்டு வைத்தியம் மூலம் லிப்போமா பிரச்சனையை அறுவை சிகிச்சை இன்றி சரிசெய்ய இது ஒரு சிறந்த வழியாகும்.

 

 

View this post on Instagram

 

A post shared by Holy Bites (@newholybites)