“நண்பனுக்காக போன் செய்த அஜித்” – விஜய்யின் அரசியல் வெற்றிக்கு ‘தல’ கொடுத்த சர்பிரைஸ்…!

By Swetha on வைகாசி 5, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புதிய மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், அவருக்குத் திரைத்துறையினரும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும் பிரபல கார் ரேசருமான அஜித்குமார், விஜய்க்குத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் மக்களின் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்பதாகத் தெரிவித்துள்ள சூழலில், அஜித்தின் இந்த வாழ்த்து அரசியல் நாகரிகத்தின் முக்கிய அங்கமாகப் பார்க்கப்படுகிறது. திரையில் போட்டியாளர்களாகக் கருதப்பட்டாலும், நிஜ வாழ்க்கையில் நண்பர்களாகத் திகழும் இவர்களின் இந்த உரையாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

   

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள விஜய்க்கு, கார் ரேசர் அஜித் கொடுத்த இந்த ‘ஸ்பீடு’ வாழ்த்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீண்ட கால நண்பர்களான இவர்களின் இந்த ஆரோக்கியமான உறவு, இரு தரப்பு ரசிகர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது