தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழ்நாட்டில் ‘கூட்டணி ஆட்சி’யையே மக்கள் விரும்புகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பே விசிக இத்தகைய ஆட்சி மாற்றத்தை முன்மொழிந்ததாகவும், தற்போது அதனை வழிமொழிந்து தீர்ப்பளித்துள்ள தமிழ்நாட்டு மக்களுக்குத் தனது நன்றியினைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திருமாவளவனின் இந்தக் கருத்து அரசியல் ரீதியாக மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரம் மற்றும் கூட்டணி அரசாங்கம் என்பதே காலத்தின் கட்டாயம் என்பதை மக்கள் உணர்த்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
