“வெயிட் அண்ட் சீ” கடைசி நிமிட டிவிஸ்ட்…! தவெக-வுடன் அதிமுக ரகசிய டீல்..? விஜயபாஸ்கர் சொன்ன அந்த ஒரு வார்த்தை..!!

By Soundarya on வைகாசி 5, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், தமிழகத்தில் ‘தொங்கு சட்டப்பேரவை’ அமையும் சூழல் உருவாகியுள்ளது. இத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ள போதிலும், அக்கட்சி இதுவரை எந்தவொரு கூட்டணியிலும் இணையவில்லை. இதனால், ஆட்சி அமைக்கத் தேவையான ஆதரவைப் பெற தவெக தலைவர் விஜய் எந்த மாதிரியான முடிவை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது.

குறிப்பாக, திமுக அல்லது அதிமுக தலைமையிலான கூட்டணிகளில் இடம்பெற்றுள்ள கட்சிகள், புதிய ஆட்சி அமைய தவெக-விற்கு ஆதரவு அளிக்குமா என்ற விவாதங்கள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், அரசியல் கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் திரைமறைவு நகர்வுகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

   

இந்நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம், “தவெக-வுடன் அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா?” எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “போகப் போகத் தெரியும், பொறுத்திருந்து பார்ப்போம்” என மிகவும் நுணுக்கமான பதிலை அளித்தார். அவரது இந்தப் பதில், அதிமுக மற்றும் தவெக இடையே கூட்டணி அமைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை மறைமுகமாக உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.