தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, தவெக சார்பில் வெற்றி பெற்ற அனைத்து MLA-க்களும் தங்களது வெற்றிச் சான்றிதழுடன் இன்று (மே 5) மதியத்திற்குள் சென்னைக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் போது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் விஜய் நேரில் சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய சூழலில், ஆட்சி அமைக்கத் தேவையான முழு பலம் தவெக-விடம் இல்லாததால், பிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னைக்கு வரும் MLA-க்களைத் தங்க வைப்பதற்காக மாமல்லபுரத்தில் உள்ள ‘Four Points by Sheraton’ ரிசார்ட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
