தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தொண்டர்களும் ரசிகர்களும் மாநிலம் முழுவதும் உற்சாகமாக வெற்றியைத் தவித்து வருகின்றனர். இந்த அரசியல் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், சென்னை நீலாங்கரையில் உள்ள அக்கட்சியின் தலைவர் விஜய்யின் இல்லத்திற்கு நடிகை திரிஷா நேரில் வருகை தந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு அதிகாலையிலேயே திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா, அங்கிருந்து நேரடியாக சென்னை திரும்பி விஜயைச் சந்தித்து தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திரையில் வெற்றிக் கூட்டணியாக வலம் வந்த இவர்கள், தற்போது விஜய்யின் அரசியல் வெற்றிக் கொண்டாட்டத்திலும் இணைந்திருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
