BREAKING: தமிழகத்தில் தவெக முதலிடம்…. அதிரும் அரசியல் களம்….!!

By Devi Ramu on வைகாசி 4, 2026

Spread the love

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. பாரம்பரியமாக திமுக மற்றும் அதிமுக அணிகளுக்கு இடையே நிலவி வந்த நேரடிப் போட்டி, இந்த முறை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் வருகையாலும், சீமானின் நாம் தமிழர் கட்சியின் வளர்ந்து வரும் வாக்கு வங்கியாலும் மும்முனை அல்லது அதற்கு மேற்பட்ட முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில் காலை நிலவரப்படி தமிழக வெற்றி கழகம் 38 இடங்களிலும், அதிமுக 29 இடங்களிலும், திமுக 28 இடங்களிலும், நாதக ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன முதல் முறையாக தேர்தலை சந்தித்த தமிழக வெற்றி கழகம் திமுக அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தில் முன்னிலை வகிப்பதால் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.