பதற வைக்கும் த.வெ.க-வின் பிளான்..! ‘சீட்’ கிடைக்காத சீனியர்களுக்கு சிவப்புக் கார்பெட்… தேர்தல் முடிவுக்குப் பின் மெகா ட்விஸ்ட்..!!

By Soundarya on வைகாசி 4, 2026

Spread the love

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், தனது கட்சியின் செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ளவும், அதனை மேலும் வலுப்படுத்தவும் விஜய் இப்போதே அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். இதற்காக பனையூர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு அவர் பல்வேறு முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

மற்ற பெரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவினர் த.வெ.க. வேட்பாளர்களை விலைக்கு வாங்குவதை விஜய் விரும்பவில்லை. எனவே, தேர்தலுக்குப் பிந்தைய சூழலைச் சமாளிக்க, மாற்றுக்கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளைக் கண்டறிந்து அவர்களைத் தங்கள் பக்கம் இழுக்க அவர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக கோவை மண்டலத்தில் உள்ள 5 மாவட்டச் செயலாளர்களுக்கு இதற்கான முக்கியப் பொறுப்புகள் (அசைன்மெண்ட்) வழங்கப்பட்டுள்ளன.

   

திமுக, அதிமுக, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் சீட் கிடைக்காதவர்கள், சீனியர்களால் ஓரங்கட்டப்பட்டவர்கள் மற்றும் அதிருப்தியில் இருப்பவர்களைத் த.வெ.க.வில் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களுக்குக் கட்சியில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக கிணத்துக்கடவு தொகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் சிலர் த.வெ.க.வில் இணைய உள்ளதாகவும், தேர்தல் முடிவுகளுக்குப் பின் இன்னும் பல முக்கியப் புள்ளிகள் இணைவார்கள் என்றும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.