பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

By Soundarya on வைகாசி 3, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில் போட்டு கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீம்ராவ் காம்ப்ளே என்ற அந்த நபர், தனது குற்றத்தை மறைப்பதற்காகச் சிறுமியின் உடலை மாட்டுச் சாணக் குவியலுக்கு அடியில் புதைத்து வைத்துள்ளார்.

சிறுமியைக் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் உதவியுடன் சிறுமியின் உடல் மீட்கப்பட்டதோடு, குற்றவாளியான பீம்ராவ் காம்ப்ளேவை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

   

விசாரணையில் அந்த முதியவர் ஏற்கனவே சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இரண்டு முறை சிறைக்குச் சென்றவர் என்பது தெரியவந்தது. ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் இதுபோன்ற கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார். இத்தகைய கொடூரமான குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.