90-களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகை மாளவிகா, தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்த ரகசியங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். தானும் தனது கணவர் சுமேஷ் மேனனும் முதலில் நண்பர்களாகப் பழகியதாகவும், எதிர்பாராத விதமாக அவர் காதலைச் சொன்னபோது தான் அதிர்ச்சியடைந்ததாகவும் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஒரு வருடம் இருவரும் டேட்டிங் செய்த பிறகு, கடந்த 2007-ம் ஆண்டு முறைப்படி திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நேரத்தில், தான் திடீரென கர்ப்பமானதாக மாளவிகா குறிப்பிட்டுள்ளார். அந்தச் சூழலில் நடிப்பைத் தொடர முடியாததால், ஒப்பந்தமான மூன்று படங்களின் முன்பணத்தை (Advance) தயாரிப்பாளர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு சினிமாவிலிருந்து விலகியதாக அவர் கூறியுள்ளார். குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்துவதற்காகத் தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவு குறித்து அவர் தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.
