தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகத் திகழும் அஜித்குமார், தற்போது சினிமாவில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு கார் பந்தயங்களில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித்குமாரைப் பாராட்டிப் பேசியுள்ளார். அஜித்திடம் தமக்கு நெருங்கிய நட்பு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அஜித்குமார் மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், அஜித்குமார் அரசியலுக்கு வர வேண்டும் என சுந்தர்.சி தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், சுந்தர்.சி தற்போது மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார். தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானால், சினிமாவில் இருந்து முழுமையாக விலகித் தனது தொகுதிப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
