கூட்டணிக்கு ஒத்துழைக்காத “அந்த கருப்பு ஆடுகள்” யார் யார்..? லிஸ்ட் எடுக்கும் விசிக தலைமை.. தேர்தல் முடிவுக்குப் பின் அதிரடி ஆக்ஷன்..!!

By Soundarya on வைகாசி 3, 2026

Spread the love

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள ‘உள்’ விவகாரங்கள் தொடர்பாகத் தலைவர் திருமாவளவன் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். தேர்தல் சமயத்தில் ஒரு சில தொகுதிகளில் விசிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவில்லை எனத் தலைமைக்குப் புகார்கள் குவிந்துள்ளன. இது கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் செயல் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இதற்குக் காரணமானவர்கள் குறித்த தகவல்கள் தற்போது திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அனைத்து 234 தொகுதிகளிலும் விசிகவினர் முழு மூச்சாகப் பணியாற்ற வேண்டும் எனத் தான் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்ததாகவும், அந்த உத்தரவை மீறி மெத்தனமாகச் செயல்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருமாவளவன் கூறியுள்ளார். தேர்தல் முடிவுகளுக்குப் பின் இதற்கான ‘களையெடுப்பு’ கட்சிக்குள் இருக்கும் எனத் தெரிகிறது. துரோகம் இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

   

திருமாவளவனின் இந்தத் திடீர் எச்சரிக்கை, கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள கசப்புணர்வைக் குறைக்கவும், கட்சியில் ஒழுக்கத்தை உறுதிப்படுத்தவும் எடுக்கப்பட்ட ஒரு ராஜதந்திர நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கூட்டணிக் தர்மத்தைக் காப்பதிலும், கட்சியின் கட்டுப்பாட்டைத் தக்கவைப்பதிலும் அவர் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார். தேர்தல் முடிவுகள் வரும் நேரத்தில் கட்சிக்குள் எழுந்துள்ள இந்தச் சலசலப்பு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.