இனி இறந்தவர்களின் உடல்களை எரிக்க வேண்டாம்… வந்தது நீர் தகனம்… புதிய கண்டுபிடிப்பு..!!!

By Soundarya on வைகாசி 3, 2026

Spread the love

இறந்தவர்களின் உடல்களை எரிப்பது சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்பதால், அதற்கு மாற்றாக ‘நீர் தகனம்’ (Aquamation) எனும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறையில் உடலானது பொட்டாசியம் ஹைட்ராக்சைடு கலவையில் வைக்கப்பட்டு, சுமார் 90 நிமிடங்கள் வரை 150°C வெப்பநிலைக்குச் சூடுபடுத்தப்படுகிறது.

இந்தச் செயல்பாட்டின் மூலம் உடலின் மென்மையான திசுக்கள் அனைத்தும் கரைந்து, எலும்புகள் மட்டுமே எஞ்சியிருக்கும். பின்னர் அந்த எலும்புகள் பொடியாக்கப்பட்டுக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகின்றன. இந்தச் சுற்றுச்சூழல் நட்பு முறையை ஸ்காட்லாந்து அரசு தற்போது சட்டப்பூர்வமாக்கியுள்ளது.