பகீர்!..” விடுதி அறையில் 50 வயது நபர் மர்ம மரணம்… பின்னணியில் இருந்த ‘அந்த’ மாத்திரை… கிசங்கானியில் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ”….!!!

By Muthu Mani on வைகாசி 3, 2026

Spread the love

கிசங்கானியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், பாலியல் ஊக்க மருந்துகளை உட்கொண்ட பிறகு ஒரு பெண் தோழியுடன் தங்கியிருந்த விடுதியிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் ஒரு பாஸ்டர் (போதகர்) என்றும், அவர் தனது சபையைச் சேர்ந்த ஒரு பெண்ணைச் சந்திக்கச் சென்றபோது இந்த விபரீதம் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. அளவுக்கு அதிகமான பாலியல் ஊக்க மருந்துகளை உட்கொண்டதே அவரது திடீர் மாரடைப்பு மற்றும் மரணத்திற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள மருத்துவ நிபுணர்கள், மருத்துவரின் முறையான பரிந்துரை இன்றி ‘சில்டெனாபில்’ (Sildenafil) போன்ற மருந்துகளை உட்கொள்வது உயிருக்கு ஆபத்தானது என்று கூறியுள்ளனர். குறிப்பாக, ‘இயற்கையானது’ என்று கூறி விற்கப்படும் சில பழச்சாறுகள் மற்றும் மதுபானங்களில் சட்டவிரோதமாக இத்தகைய வேதிப்பொருட்கள் கலக்கப்படுகின்றன. இதய நோய் உள்ளவர்கள் இத்தகைய போலி ஊக்க மருந்துகளை உட்கொள்ளும்போது அது ரத்த அழுத்தத்தில் பாதிப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை உண்டாக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.