தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள லஸ்ஸி கடையில், பானங்கள் தயாரிக்கும்போது தண்ணீரில் சிறுநீரைக் கலந்து விற்பனை செய்ததாக இளைஞர் ஒருவர் மீது எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் லஸ்ஸி குடிக்க வந்த வாடிக்கையாளர்கள், அந்த இளைஞரின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள் கடையைச் சூழ்ந்துகொண்டு ரகளையில் ஈடுபட்டதால் அந்த இடத்தில் பதற்றமான சூழல் நிலவியது.
பொதுமக்களின் போராட்டமும் ஆத்திரமும் அதிகரித்ததைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் கடை உரிமையாளர் சம்பந்தப்பட்ட அந்த இளைஞரை அங்கிருந்து விரட்டியடித்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், உண்மையில் அங்கு என்ன நடந்தது என்பது குறித்தும், அந்த இளைஞர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் சுகாதாரத்தோடு விளையாடும் இத்தகைய செயல்கள் சமூகத்தில் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளன.
