வட்டி மட்டுமே ரூ.2 லட்சம் வரை கிடைக்கும்…! குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபீஸின் ஜாக்பாட் திட்டம்…. முழு விவரம் இதோ….!!

By Devi Ramu on வைகாசி 3, 2026

Spread the love

பாதுகாப்பான சேமிப்பையும் அதிக லாபத்தையும் எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு தபால் துறையின் நேர வைப்புத் திட்டம் (Time Deposit Scheme) ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இத்திட்டத்தில் 5 ஆண்டுகால முதலீட்டிற்கு அதிகபட்சமாக 7.5% வட்டி வழங்கப்படுகிறது; ஒருவர் வெறும் 1,000 ரூபாயிலிருந்து தனது சேமிப்பைத் தொடங்கலாம். உதாரணமாக, 4.5 லட்சம் ரூபாயை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால், முதிர்வு காலத்தில் வட்டியாக மட்டுமே சுமார் 2 லட்சம் ரூபாய் லாபம் ஈட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்தில் தனிநபராகவோ அல்லது கூட்டாகவோ கணக்கைத் தொடங்கலாம் என்பதோடு, முதலீட்டிற்கு மத்திய அரசின் முழு உத்தரவாதம் இருப்பதால் எவ்வித ரிஸ்க்கும் இல்லை. மேலும், வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு சலுகைகளையும் பெற முடியும். 1 முதல் 5 ஆண்டுகள் வரை தங்கள் வசதிக்கேற்ப முதலீட்டுக் காலத்தைத் தேர்வு செய்யும் வசதி உள்ளதால், நடுத்தர வர்க்கத்தினருக்கு இது ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.