“விஜய் பாட்டு கேட்டதும் த்ரிஷா செய்த காரியம்!”… மீண்டும் கொளுத்திப் போட்ட குந்தவை… சமூக வலைதளங்களை அதிரவைக்கும் லேட்டஸ்ட் அப்டேட்…!!!

By Muthu Mani on வைகாசி 2, 2026

Spread the love

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து செய்திகள் இணையத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளன. சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதே பிரிவிற்கான முக்கிய காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல், ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், விஜய்யுடன் இணைத்துப் பேசப்படும் நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

குறிப்பாக, விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பின. இந்தச் சர்ச்சைகளைச் சற்றும் பொருட்படுத்தாத வகையில், த்ரிஷா தனது சமூக வலைதளப் பக்கங்களில் விஜய்யைத் தொடர்புபடுத்தும் பதிவுகளைத் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, விஜய் நடித்த படத்தின் பாடலுடன் தனது புகைப்படங்களைத் த்ரிஷா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது பேசுபொருளானது.

   

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வரும் மே 4-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், த்ரிஷாவின் தற்போதைய பதிவு மீண்டும் சர்ச்சையைத் தூண்டியுள்ளது. புகழ்பெற்ற ‘கில்லி’ திரைப்படத்தின் “அப்படி போடு…” பாடலுக்குச் சிறுவர்கள் நடனமாடும் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அரசியல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், த்ரிஷாவின் இத்தகைய பதிவுகள் விஜய் – சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு மேலும் தீனி போடும் வகையில் அமைந்துள்ளதாகத் திரைத்துறையினர் மற்றும் நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.