“ஆட்சியில் பங்கா.?” உஷாரான திமுக… அந்த விஷயத்தை வைத்து லாக் செய்ததால் அதிர்ச்சியில் காங்கிரஸ்..!!

By Soundarya on வைகாசி 2, 2026

Spread the love

தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே, காங்கிரஸ் கட்சியின் கிரிஷ் சோடங்கர் “ஆட்சியில் பங்கு” என்ற முழக்கத்தை முன்வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உஷாரான திமுக தலைமை, காங்கிரஸ் தரப்பிலிருந்து வரக்கூடிய அழுத்தத்தைச் சமாளிக்க ஒரு ‘மாஸ்டர் பிளானை’ தீட்டி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில் பலரைத் தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம் பலத்தை அதிகரிக்க திமுக திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளுக்கான தேர்தல் செலவுகளை திமுகவே கவனித்துக் கொண்டதால், அந்த எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் ஈர்ப்பது எளிது என்று திமுக தரப்பு கருதுகிறது. கூட்டணியில் இருந்துகொண்டே ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸின் வியூகத்தை முறியடிக்க, திமுக எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் களத்தில் ஒரு முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமையவுள்ள ஆட்சியில் யாருடைய கை ஓங்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.