“அவளோடு நானும் போறேன்…” காதலி இறந்த துக்கம்… கல்லூரி மாணவரின் விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

By Devi Ramu on வைகாசி 2, 2026

Spread the love

பொள்ளாச்சி அருகே காதலி உயிரிழந்த அதே கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனைமலை பகுதியைச் சேர்ந்த அந்த மாணவரும், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் உயிருக்கு உயிராகக் காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட மனவருத்தம் காரணமாகக் காதலி கிணற்றில் குதித்துத் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இதனால் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த அந்த மாணவர், யாரிடமும் பேசாமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

தன்னுடைய காதலியின் மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்த இளைஞர், இறுதியில் காதலி இறந்த அதே இடத்திற்குச் சென்று கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் தேடிச் சென்ற பெற்றோர், கிணற்றில் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து நிலைகுலைந்து போயினர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இரண்டு மரணங்கள் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.