நடிகர் வடிவேலுவுடன் மீண்டும் இணைந்து நடிப்பதை விட, பிச்சை எடுத்துக்கூட பிழைப்பேன் என்று நடிகை சோனு பேசியிருப்பது தற்போது திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. யூடியூப் சேனல் ஒன்றின் ‘Rapid Fire’ நேர்காணலில் பங்கேற்ற அவர், தனக்குப் பணத்தை விட சுயமரியாதைதான் மிக முக்கியம் என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
வடிவேலுவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கக் கூடாது என்பதற்காக, தான் இதுவரை சுமார் 16 பட வாய்ப்புகளை மறுத்துவிட்டதாக சோனு அதிர்ச்சிகரமான தகவலைக் கூறியுள்ளார். இவர்களுக்குள் அப்படி என்னதான் பிரச்சனை நடந்தது என்பது குறித்து கோலிவுட் வட்டாரத்தில் தற்போது காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.
