“2 லட்சம் சம்பளம் வாங்கியும் நிம்மதி இல்ல” இன்ஸ்டாகிராமில் மனைவியின் அந்தரங்க வீடியோக்கள்… ஏரியில் குதித்து கணவன் தற்கொலை… சிக்கிய பரபரப்பு கடிதம்..!!

By Soundarya on வைகாசி 1, 2026

Spread the love

ஐதராபாத்தில் மென்பொருள் பொறியாளர் சீதாராம் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவரது மனைவி உட்பட மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் ஹுசைன் சாகர் ஏரியில் குதித்து சீதாராம் தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த 19 பக்க தற்கொலை கடிதத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, அவரது மனைவி ரேணுகா மற்றும் அவருக்குத் துணையாக இருந்த ரமண ரெட்டி, ஸ்ரவண் ஆகியோரை போலீஸார் சிறையில் அடைத்தனர்.

ஆந்திர மாநிலம் மார்க்காபுரத்தைச் சேர்ந்த சீதாராம், மாதம் 2 லட்சம் ரூபாய் ஊதியம் பெறும் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். அவர் விட்டுச் சென்ற உருக்கமான கடிதத்தில், தனது மனைவி ரேணுகா மூன்று நபர்களுடன் முறையற்ற தொடர்பில் இருந்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார். குடும்பத்திற்காகத் தான் கடுமையாக உழைத்த போதிலும், மனைவியின் நடத்தையில் மாற்றம் ஏற்படாதது தனக்குத் தீராத மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

   

இந்த வழக்கின் விசாரணையில், ரேணுகா மற்றும் அவரது கூட்டாளியான ரமண ரெட்டி ஆகியோர் தங்கள் தனிப்பட்ட வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது போன்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. சீதாராமின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மென்பொருள் பொறியாளரின் இந்தத் துயரமான முடிவு மற்றும் அதன் பின்னணியில் உள்ள காரணங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.