பெற்றோர்களே உஷார்..! பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்கும் தேர்தல் பிரச்சாரங்கள்… அதிரடி எச்சரிக்கை விடுத்த அரசு..!!

By Soundarya on சித்திரை 30, 2026

Spread the love

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பெற்றோர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. 18 வயதுக்குக் கீழான குழந்தைகள் மற்றும் சிறுவர்களைப் பயன்படுத்தி, அவர்களை மனரீதியாகத் தூண்டி தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இத்தகைய செயல்கள் குழந்தைகளின் மனநலனைப் பாதிக்கும் என்பதால் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தேர்தல் முடிவுகளோ அல்லது தேர்வு முடிவுகளோ அவர்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை எனில், குழந்தைகள் தவறான முடிவுகளை எடுக்கும் மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இக்கட்டான சூழல்களில் அவர்களைப் பாதுகாப்பது நமது கடமை என ஆணையம் வலியுறுத்தியுள்ளது. குழந்தைகளின் உரிமைகளையும் எதிர்காலத்தையும் காக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதே இந்த அறிவுறுத்தலின் நோக்கமாகும்.