பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே நடந்த ஒரு கொடூரமான கொலைச் சம்பவம், அதன் பின்னணியைக் கேட்டு காவல்துறையினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருமணத்திற்குப் பிறகும் தனது கள்ளக்காதலனுடன் தொடர்பில் இருந்த மனைவியை, ஆத்திரமடைந்த கணவன் மிகக் கொடூரமான முறையில் சுட்டுக் கொன்ற விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
காவல்துறையின் விசாரணையில் அந்த நபர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான இரண்டு ஆண்டுகளில், அவர்கள் இருவரும் ஒரு மாதம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்துள்ளனர். மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தால் இருவரும் தனித்தனி அறைகளிலேயே தூங்கி வந்துள்ளனர். தனது கள்ளக்காதல் உறவை விடுவித்துக் கொள்ளுமாறு கணவர் பலமுறை கெஞ்சியும், அறிவுரை சொல்லியும் அந்தப் பெண் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த அன்று, கணவரிடம் சொல்லாமல் அந்தப் பெண் தனது கள்ளக்காதலனுடன் ஒரு ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற கணவர், மனைவியின் அந்தரங்க உறுப்பு உள்ளிட்ட உடல் பாகங்களில் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த இந்த விபரீத கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
