BREAKING: மே 9-ல் உக்ரைன் போர் நிறுத்த அறிவிப்பு… “90 நிமிட ரகசியப் பேச்சுவார்த்தை”… புதினுக்கு டிரம்ப் போட்ட ‘கண்டிஷன்’….!

By Nanthini on சித்திரை 30, 2026

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருக்கு இடையே நேற்று நடைபெற்ற 90 நிமிடத் தொலைபேசி உரையாடல், சர்வதேச அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீவிரப் பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் போரில் ஒரு “சிறிய போர் நிறுத்தத்தை” (A little bit of a ceasefire) மேற்கொள்ளுமாறு புதினிடம் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், தங்களது உரையாடல் ஆக்கப்பூர்வமாக அமைந்ததாகவும், தனது போர் நிறுத்தப் பரிந்துரையை புதின் ஏற்றுச் செயல்படுத்துவார் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றுவதில் ரஷ்யா உதவ முன்வந்த போதிலும், தற்போதைய சூழலில் உக்ரைன் போர் நிறுத்தத்திற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக, வரும் மே 9-ஆம் தேதி ரஷ்யா கொண்டாடும் இரண்டாம் உலகப்போர் வெற்றி தினத்தின் போது, இந்தத் தற்காலிகப் போர் நிறுத்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை புதின் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக நீடித்து வரும் உக்ரைன் மோதலில், இந்த முன்னெடுப்பு அமைதிக்கான ஒரு முக்கியத் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.