தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்குக் கேழ்வரகு விநியோகம் செய்வதற்காக, விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கேழ்வரகைக் கொள்முதல் செய்யும் பணியைத் தமிழக அரசு தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காகக் கேழ்வரகு ஒரு டன்னுக்கு ₹48,860 எனச் சந்தை விலைக்கு இணையாகக் குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயம் செய்துள்ளது.
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தக் கொள்முதல் பணிக்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, கேழ்வரகு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அரசு நிர்ணயித்துள்ள விலையில் தங்கள் விளைச்சலை விற்பனை செய்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
