“இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு பொன்னான வாய்ப்பு… NPCIL-லில் 330 காலி பணியிடங்கள்… கடைசி தேதி நெருங்குகிறது… உடனே விண்ணப்பியுங்கள்”…!!!

By Muthu Mani on சித்திரை 29, 2026

Spread the love

இந்திய அணுசக்தி நிறுவனத்தில் (NPCIL) காலியாக உள்ள 330 எக்சிகியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் மெக்கானிக்கல் (125), எலக்ட்ரிக்கல் (65), எலக்ட்ரானிக்ஸ் (50), கெமிக்கல் (40), சிவில் (35) மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன் (15) ஆகிய துறைகளில் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சம்பந்தப்பட்ட பொறியியல் துறைகளில் (B.E/B.Tech) பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு முறையைப் பொறுத்தவரை, GATE தேர்வு (2024 / 2025 / 2026) மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பட்டியலிடப்பட்டு, பின்னர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தகுதியுள்ளவர்கள் npcilcareers.co.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இருப்பினும் பெண்கள் மற்றும் எஸ்.சி/எஸ்.டி (SC/ST) பிரிவினருக்குக் கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பிக்கக் கடைசி நாள் 30.04.2026 ஆகும், எனவே தகுதியுள்ள பொறியியல் பட்டதாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.