“மகனே என்னை மன்னித்துவிடு!”… மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு தந்தை அனுப்பிய கடைசி மெசேஜ்… கணவன் விபரீத முடிவு… நடுங்க வைக்கும் பின்னணி…!!!

By Muthu Mani on சித்திரை 28, 2026

Spread the love

சென்னை நங்கநல்லூரில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு, கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தில்லை கங்கா நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் (52) நீண்ட நாட்களாக வேலைக்குச் செல்லாமல் இருந்த நிலையில், அவரது மனைவி நாகலட்சுமி (42) பட்டுப்புடவை வியாபாரம் செய்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இவர்களது மகன்கள் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படித்து வரும் நிலையில், கணவன்-மனைவி இடையே பண விவகாரங்கள் மற்றும் சுப்பிரமணியனின் பொறுப்பற்ற போக்கு காரணமாகத் தொடர்ந்து மோதல்கள் நீடித்து வந்துள்ளன.

நேற்று மதியம் மீண்டும் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், வெளியில் சென்று அரிவாள் ஒன்றை வாங்கி வந்து நாகலட்சுமியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர், கல்லூரி சென்றிருந்த மகனுக்கு, “நானும் அம்மாவும் இனி இருக்க மாட்டோம், உனக்குச் சாப்பாடு வைத்திருக்கிறேன்” என்று குறுந்தகவல் அனுப்பிவிட்டு, தானும் மற்றொரு அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு விரைந்து வந்த மகன், தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் தந்தை உயிரிழந்திருப்பதையும் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.

   

தகவலறிந்து வந்த ஆதம்பாக்கம் போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கடை நடத்துவதில் ஏற்பட்ட கடன் தொல்லை மற்றும் கணவனின் பணத்தேவை தொடர்பான அழுத்தம் இக்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. குடும்பத் தலைவியின் உழைப்பில் பிள்ளைகள் உயர்கல்வி பயின்று வந்த நிலையில், ஏற்பட்ட இந்த விபரீத முடிவு அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. போலீசார் இது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.