ஐதராபாத்தில் அதிகாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யச் சென்ற பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்தப் பெண்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காலை 6 மணியளவில் அங்குள்ள சைக்கிள் ஓட்டும் பாதையில் (Cycling Track) ஒரு பெண் ஓடிக்கொண்டிருந்தபோது, கூட்ட நெரிசலுக்கு மத்தியிலும் ஒரு காம விகார பிடித்த நபர் அந்தப் பெண்ணையே வெறித்துப் பார்த்தபடி அநாகரிகமான முறையில் சுய இன்பத்தில் ஈடுபட்டுள்ளார். பொது இடத்தில் அரங்கேறிய இந்த அருவருப்பான செயல் அந்தப் பெண்ணை நிலைகுலைய வைத்தது.
அந்த நபர் செய்த அநாகரிகச் செயலைத் தட்டிக்கேட்ட அந்தப் பெண், உடனடியாகத் தனது செல்போனை எடுத்து வீடியோ எடுக்கத் தொடங்கினார். இதைக் கண்டதும் அந்த நபர் தனது முகம் பதிவாகிவிடக் கூடாது என்பதற்காக அங்கிருந்த புதர்களுக்குள் ஓடி மறைந்துவிட்டார். “ஓடும்போது இந்த ஆடைகளை அணியக்கூடாது என்றால், வேறு எதைத்தான் அணிய வேண்டும்?” எனத் தனது பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் இந்தச் சமூகம் மற்றும் அந்த நபர் குறித்து அந்தப் பெண் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இத்தகைய வக்கிர புத்தி கொண்ட நபர்கள் மீது காவல்துறை மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
