“10-வது முடித்திருந்தால் போதும்.. மத்திய அரசில் 3000 காலிப்பணியிடங்கள்… மாதம் ₹36,000 சம்பளம்.. இப்போதே விண்ணப்பியுங்கள்”…!!!

By Muthu Mani on சித்திரை 28, 2026

Spread the love

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தர் (Stenographer), ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட 3,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ₹36,000 வரை ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்ற தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் https://ssc.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வு முறையானது கணினி வழித் தேர்வு (CBT), தட்டச்சுத் தேர்வு, டேட்டா என்ட்ரி மற்றும் கணிதத் திறன் தேர்வு எனப் பல்வேறு நிலைகளாக நடத்தப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மே மாதம் 4-ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.