10 படித்திருந்தால் போதும்… 11,127 காலியிடங்கள்… ரயில்வே வாரியம் வெளியிட்ட மெகா அறிவிப்பு… உடனே அப்ளை பண்ணுங்க…!!

By Muthu Mani on சித்திரை 27, 2026

Spread the love

ரயில்வே தேர்வு வாரியம் (RRB) தற்போது 11,127 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பத்தாம் வகுப்புடன் சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ, டிகிரி அல்லது பொறியியல் (Engineering) படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹19,900 முதல் ₹63,200 வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள், வரும் மே 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாகத் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் இந்தத் தகவலைப் பகிர்ந்து உதவுங்கள்.