தவெக ஆட்சியமைத்தால் 2 துணை முதல்வர்கள்… யாருக்கெல்லாம் தெரியுமா..? இப்பவே டிக் அடித்த விஜய்…!!

By Soundarya on சித்திரை 27, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்போம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) களம் கண்டுள்ளது. குறிப்பாக, வாக்குப்பதிவு முடிந்து சமூக வலைதளங்களில் வெளியான அக்கட்சிக்கு ஆதரவான பல்வேறு காணொலிகள் மற்றும் கள நிலவரங்கள் கட்சியின் தலைவர் விஜய்க்கு மிகுந்த உற்சாகத்தையும், புதிய உத்வேகத்தையும் அளித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நேர்மறையான சூழலைத் தொடர்ந்து, விஜய் தனது கட்சி வேட்பாளர்களுடன் காணொலி வாயிலாகத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது தேர்தல் பணி மற்றும் வாக்கு எண்ணிக்கை குறித்த முக்கிய அறிவுறுத்தல்களை அவர் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு இடையே, ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அதிகாரப் பகிர்வு குறித்த சில சுவாரசியமான தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி, அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் மற்றும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவரை என மொத்தம் இரண்டு பேரைத் துணை முதலமைச்சர்களாக நியமிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனுபவத்திற்கும், மண்டல வாரியான பிரதிநிதித்துவத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்தத் தகவல் தவெக தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், அரசியல் களத்தில் ஒரு புதிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது.