“ஐயா வீட்டுக்கு போங்க இதெல்லாம் தப்பு” மகன் அடித்ததால் தற்கொலை செய்ய தண்டவாளத்தில் படுத்திருந்த முதியவர்… ஓடி வந்து உயிரைக் காத்த ரயில்வே ஊழியர்… நெல்லையில் நெகிழ்ச்சி..!!

By Soundarya on சித்திரை 26, 2026

Spread the love

நெல்லை வண்ணாரப்பேட்டையில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற முதியவரை, ரயில்வே ஊழியர் மீனாட்சி சுந்தரம் துரிதமாகச் செயல்பட்டு மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மகன் தன்னைத் தாக்கியதால் மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொள்ள இந்த விபரீத முடிவை எடுத்ததாக அந்த முதியவர் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார். தண்டவாளத்தில் முதியவர் படுத்திருப்பதைச் சரியான நேரத்தில் கவனித்த ரயில்வே கீ-மேன் மீனாட்சி சுந்தரம், உடனடியாக அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி ஒரு பெரும் உயிர்ச்சேதத்தைத் தடுத்துள்ளார்.

மீட்கப்பட்ட முதியவரிடம் மீனாட்சி சுந்தரம் மிகவும் பொறுமையாகப் பேசி அவருக்குத் தேவையான ஆறுதல்களை வழங்கினார். பின்னர், ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் அந்த முதியவரை ஒப்படைத்து, அவரைப் பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தார். ஒரு உயிரைக் காப்பாற்றக் காட்டிய இந்த மனிதநேய மிக்க செயலுக்காக ரயில்வே ஊழியர் மீனாட்சி சுந்தரத்திற்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.