திமுகவுக்கு ஷாக்..! அதிமுகவில் ஐக்கியமான 2 கவுன்சிலர்கள்… தேர்தல் முடிவுக்கு முன் செக் வைத்த எடப்பாடி..!!

By Soundarya on சித்திரை 26, 2026

Spread the love

கோவையில் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில், திமுகவின் 77-வது வார்டு கவுன்சிலர் ராஜலட்சுமி, 91-வது வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன் மற்றும் முக்கிய நிர்வாகியான கருணாநிதி ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் திடீரென எதிர்க்கட்சியான அதிமுகவில் இணைந்தது கோவை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

இந்த அதிரடி கட்சித் தாவல் குறித்து விளக்கம் அளித்த ராஜலட்சுமி, திமுகவில் சீனியர்களுக்கு உரிய மதிப்பும் அங்கீகாரமும் அளிக்கப்படுவதில்லை என்ற தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். நீண்ட காலமாகக் கட்சியில் உழைத்தவர்களுக்கு முக்கியத்துவம் தராமல் உதாசீனப்படுத்துவதாலேயே இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வரவிருக்கும் நேரத்தில் நிகழ்ந்துள்ள இந்தத் திடீர் மாற்றம், கோவையில் திமுகவின் பலத்தைப் பாதிக்குமா அல்லது அதிமுகவிற்கு சாதகமாக அமையுமா என்ற விவாதத்தை அரசியல் விமர்சகர்களிடையே கிளப்பியுள்ளது.