காலையிலேயே அதிர்ச்சி…! தவெக நிர்வாகியை வெட்டிய திமுக நிர்வாகி… தஞ்சாவூரில் பரபரப்பு..!!

By Soundarya on சித்திரை 26, 2026

Spread the love

தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி அருகே, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கிளை இணைச் செயலாளர் வேலாயுதம் மற்றும் அவரது மனைவியை, திமுக கிளை நிர்வாகி ரஜினி என்பவர் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. நடந்து முடிந்த தேர்தலில் ‘விசில்’ சின்னத்திற்கு வேலாயுதம் தீவிரமாகப் பணியாற்றி அதிக வாக்குகளைப் பெற்றுத் தந்ததே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள திமுக நிர்வாகி ரஜினியைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடந்த இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.