“எனக்கு அது தெரிகிறது” மரணப் படுக்கையில் தாய் கண்ட அந்த காட்சி… நிலைகுலைந்து போன மகள்கள்.. இணையத்தை உலுக்கும் உருக்கமான வீடியோ..!!

By Soundarya on சித்திரை 25, 2026

Spread the love

தன் தாயின் கடைசி நிமிடங்களை ஒரு மகள் தனது அலைபேசியில் பதிவு செய்தபோது, அதில் பதிவானக் காட்சிகள் பார்ப்பவர்களை ஒருபுறம் நெகிழ வைத்தாலும், மறுபுறம் சிலிர்க்க வைத்துள்ளன. படுக்கையில் அமைதியாகக் கிடந்த அந்த வயதானத் தாய், அறையில் இருந்த யாரையும் பார்க்கவில்லை. மாறாக, அவரது கண்கள் மேல்நோக்கி நிலை குத்தியிருந்தன. முகத்தில் ஒரு மெல்லிய, அமைதியானப் புன்னகையோடு அவர் “தேவதைகள்…” (Angels) என்று மெதுவாக முணுமுணுத்தார்.

தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அந்த மகள், “அவர்கள் உனக்கு மகிழ்ச்சியைத் தருகிறார்களா?” என்று கேட்டார். அதற்கு அந்தத் தாய் மென்மையாகத் தலையசைத்து “ஆம்” என்றார். தொடர்ந்து மகள், “எத்தனை பேர் அங்கே தெரிகிறார்கள்?” என்று கேட்க, மிக மெல்லிய குரலில் “நான்கு… நான்கு பேர்” என்று பதிலளித்தார். அவரது இறுதித் தருணங்களில் அந்தத் தாய் கண்டது அவரது மனதிற்குத் தெரிந்த கற்பனையா அல்லது நிஜமாகவே இவ்வுலகிற்கு அப்பால் இருக்கும் ஏதோ ஒரு சக்தியா என்பது புரியாத புதிராக இருந்தாலும், அந்தத் தருணம் அங்கிருந்தவர்களை உறைந்து போகச் செய்தது.