ஏசி போட்டாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா….? இந்த ‘மேஜிக்’ நம்பரை செட் பண்ணுங்க…!!

By Devi Ramu on சித்திரை 25, 2026

Spread the love

கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில், மின்சாரக் கட்டணத்தைக் கட்டுப்படுத்த ஏசியை முறையாகப் பராமரிப்பது அவசியம். ஏசி ஃபில்டர்களைத் தொடர்ந்து சுத்தம் செய்வதும், கோடை தொடங்கும் முன்பே சர்வீஸ் செய்வதும் இயந்திரத்தின் பழுதைத் தவிர்த்து மின் நுகர்வைக் குறைக்கும். முக்கியமாக, ஏசியை 18°C-ல் வைப்பதற்குப் பதிலாக 24°C முதல் 26°C வரை பராமரிப்பது சிறந்தது. ஏனெனில் ஒவ்வொரு ஒரு டிகிரி குறைப்பிற்கும் 6 சதவீதம் வரை கூடுதல் மின்சாரம் செலவாகும்.

ஏசி இயங்கும் போது மின்விசிறியையும் சேர்த்தே பயன்படுத்துவது குளிர்ந்த காற்றை அறை முழுவதும் விரைவாகப் பரப்ப உதவும். பகல் நேரங்களில் ஜன்னல் திரைச்சீலைகளை மூடி வெப்பம் உள்ளே வருவதைத் தடுப்பதும், கதவு இடுக்குகளை அடைப்பதும் ஏசியின் சுமையைக் குறைக்கும். மேலும், இரவு நேரங்களில் ‘ஸ்லீப் மோட்’ (Sleep Mode) வசதியைப் பயன்படுத்துவது மற்றும் அறைக்குள் வெப்பத்தை உண்டாக்கும் மின்சாதனங்களைத் தவிர்ப்பது போன்ற எளிய வழிமுறைகள் மூலம் மின்சாரக் கட்டணம் எகிறாமல் குளிர்ச்சியை அனுபவிக்க முடியும்.