கதைக்காக அந்த மாதிரி நடிக்க கூட நான் தயார்… திரையுலகையே அதிர வைத்த பிக்பாஸ் ரைசா… என்ன இப்படி சொல்லிட்டாங்க…?

By Muthu Mani on சித்திரை 24, 2026

Spread the love

மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்த நடிகை ரைசா வில்சன், ஆரம்பகால பயம் மற்றும் பதட்டங்களைக் கடந்து தற்போது தென்னிந்தியத் திரைப்படங்களில் பிஸியான நடிகையாக உருவெடுத்துள்ளார். ‘வேலையில்லா பட்டதாரி 2’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ‘பியார் பிரேமா காதல்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். அண்மையில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரைசா, தனது சினிமா பயணம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

தன்னைச் சுற்றி வரும் காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ரைசா, இதுவரை தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும், தனது மனதைப் புரிந்துகொள்ளும் உண்மையான துணையைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். மேலும், நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பது குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், ரசிகர்களை மகிழ்விப்பதற்கும் கதையின் தேவைக்காகவும் மட்டுமே கவர்ச்சியான ஆடைகள் அணியப்படுகின்றன என்று விளக்கம் அளித்துள்ளார்.

   

குறிப்பாக ‘பிகினி’ ஆடை குறித்துப் பேசிய ரைசா, தான் ஒரு மாடல் என்பதால் பிகினி அணிவது தனக்குத் தவறான விஷயமாகத் தெரியவில்லை என்றும், கதைக்குத் தேவையென்றால் அந்த வகை ஆடையிலும் நடிக்கத் தயார் என்றும் அதிரடியாகக் கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இவரது இந்தப் பேட்டி, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.