விளையாட்டுப் போல கை கால்களைக் கட்டி பயங்கரம்…! கிரணின் உயிரைப் பறித்த காதலி பிரேமா…! பதைபதைக்கும் வீடியோ…!!

By Devi Ramu on சித்திரை 24, 2026

Spread the love

பெங்களூருவில் காதலனைத் தீயிட்டுக் கொளுத்தி இளம்பெண் ஒருவரே படுகொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரேமா (27) என்ற பெண், கிரண் (27) என்பவரைக் காதலித்து வந்த நிலையில், திருமணத்திற்கு கிரண் ஆர்வம் காட்டாமல் விலகிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரேமா, பழிவாங்கும் நோக்கத்தில் காதலனைத் தனது அறைக்கு வரவழைத்துள்ளார். அங்கு விளையாட்டு போல ஆசை காட்டி கிரணின் கை, கால்களைக் கட்டி, கண்களையும் மூடியுள்ளார். பின்னர் எதிர்பாராத விதமாக அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததில் கிரண் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல் கருகிய நிலையில் கிரணின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் பிரேமாவைக் கைது செய்து அவரது அலைபேசியைச் சோதனையிட்டபோது, இந்தக் கொலை தொடர்பான வீடியோக்கள் சிக்கின. இதனைத் தொடர்ந்து பிரேமா சிறையில் அடைக்கப்பட்டார். நம்பிக்கையான உறவுக்குள் அரங்கேறிய இந்த பயங்கரமான செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சமூக வலைதளங்களில் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.