நடிகர் விஜய் தற்போது தனது திரைப்பயணத்தை முடித்துக்கொண்டு முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், அவரைச் சுற்றியுள்ள தனிப்பட்ட செய்திகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. குறிப்பாக, விஜய்யின் மகள் திவ்யா சாஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததாகக் கூறப்படும் ஒரு ஸ்டோரி, இணையத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடித்த “ஜனநாயகன்” படத்தில் இடம்பெற்ற “கண்ணே மணியே கன்னிமையே” என்ற பாடலை அவர் பதிவிட்டதாகத் தகவல் வெளியான நிலையில், இது தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பாசத்தை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த சில காலங்களாகவே விஜய்யின் குடும்ப வாழ்க்கை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. விஜய்யின் மகன் சஞ்சய் தனது பெயருக்கு பின்னால் தந்தையின் பெயருக்குப் பதிலாக தாயின் பெயரை இணைத்தது மற்றும் மகளின் பட்டமளிப்பு விழாவில் விஜய் கலந்து கொள்ளாதது போன்ற விஷயங்கள் பல கேள்விகளை எழுப்பின. இதனால் விஜய்யின் பிள்ளைகள் அவர் பக்கம் இல்லையோ என்ற சந்தேகம் நிலவி வந்த சூழலில், மகளின் இந்தப் பாடல் பகிர்வு “நாங்கள் அப்பா பக்கமே இருக்கிறோம்” என்பதைச் சொல்லாமல் சொல்லும் சைகையாகப் பார்க்கப்படுகிறது.
மறுபுறம், நடிகை த்ரிஷாவுக்கும் விஜய்க்கும் இடையிலான நட்பு குறித்த பேச்சுகளும் அவ்வப்போது தலைதூக்கி வருகின்றன. சமீபத்தில் த்ரிஷா தனது சமூக வலைதளப் பதிவில் விஜய்யின் பாடலைப் பயன்படுத்தியது இந்தப் புகையை மீண்டும் கிளப்பியது. இருப்பினும், விஜய் அரசியலில் நுழைந்த பிறகு அவரைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காகவே இதுபோன்ற தேவையற்ற வதந்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாக அவருடைய ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த இன்ஸ்டாகிராம் பதிவு ஒருபுறம் வைரலானாலும், இது உண்மையிலேயே விஜய்யின் மகளுடைய அதிகாரப்பூர்வ ஐடி தானா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அந்த குறிப்பிட்ட கணக்கு ‘பிரைவேட்’ (Private) செய்யப்பட்டிருப்பதால், அதில் பகிரப்படும் தகவல்களைப் பொதுமக்களால் எளிதில் உறுதிப்படுத்த முடியவில்லை. எது எப்படியோ, விஜய் அரசியலில் அடியெடுத்து வைத்த பிறகு அவர் செய்யும் ஒவ்வொரு சிறு அசைவும், அவரது குடும்பத்தினர் பதிவிடும் ஒவ்வொரு பதிவும் ஒரு அரசியல் குறியீடாகவே பார்க்கப்படுவது மட்டும் நிதர்சனம்.
