சுற்றுலா வந்த இடத்தில் இப்படியா?… மதுவில் மயக்க மருந்து கொடுத்து அமெரிக்க பெண்ணை சீரழித்த காமபேய்கள்… தப்பி ஓடிய குற்றவாளிகளை தட்டி தூக்கி போலீசார்… கர்நாடகாவை உலுக்கிய பாலியல் வன்கொடுமை சம்பவம்…!!

By Muthu Mani on சித்திரை 23, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் கொடகு பகுதியில் உள்ள தங்கும் விடுதி (Homestay) ஒன்றில் தங்கியிருந்த அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தைச் சேர்ந்த பெண், அங்கு பணிபுரிந்த இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த இந்த விவகாரம், புதன்கிழமையான இன்றுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது அறையில் இருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஹோம்ஸ்டே உரிமையாளரிடம் முறையிட்டும் அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்பதுடன், குற்றவாளிகள் அவரது செல்போனைப் பறித்துக்கொண்டு யாரிடமும் புகாரளிக்கக் கூடாது என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

சுமார் மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருப்பதாகக் கூறப்படும் அந்தப் பெண், இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிறகு மைசூருக்குச் சென்று அங்கிருந்து அமெரிக்கத் தூதரக அதிகாரிகளைத் தொடர்புகொண்டுள்ளார். தூதரகத்தின் தலையீட்டைத் தொடர்ந்து கர்நாடகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கினர். அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினரிடம் இருந்து தப்பித்துச் செல்ல முயன்ற அந்த விடுதி ஊழியர்கள் இருவரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

   

கொடகு மாவட்ட தலைமை காவல் அதிகாரி இந்த வழக்கு குறித்துப் பேசுகையில், கைதான இரண்டு குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வரும் மே 3ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுப் பெண்மணி ஒருவருக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் கர்நாடகாவின் சுற்றுலாப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்புச் சூழல் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. தற்போது அமெரிக்கத் தூதரகமும் மாநிலப் போலீசாரும் இணைந்து இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.