“வீட்டிற்குள் நுழைந்த முன்னாள் காதலி”… கையில் துப்பாக்கி, கண்ணில் மிளகாய் பொடி… இறுதியில் அரங்கேறிய பயங்கரம்…!

By Nanthini on சித்திரை 23, 2026

Spread the love

சத்ரபதி சம்பாஜிநகரில் (முன்னர் அவுரங்காபாத்) அரங்கேறியுள்ள இந்த கொடூர கொலைச் சம்பவம், உறவுகளுக்கு இடையிலான கசப்பும் வஞ்சமும் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை உணர்த்துகிறது. பஜாஜ் நகரில் உள்ள ‘சாய் ஸ்ரத்தா பார்க்’ குடியிருப்பில் வசித்து வந்த மகேந்திரா என்பவரின் வீட்டிற்குள், அவரது முன்னாள் காதலி ஷைலா சோனார் அத்துமீறி நுழைந்துள்ளார். ஏர் பிஸ்டல் மற்றும் கூர்மையான ஆயுதம் என திட்டமிட்ட ஆயுதங்களுடன் வந்த அவர், அங்கு மகேந்திராவின் மனைவி சாதனா மற்றும் அவரது வயதான மாமியாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆரம்பத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய ஷைலாவிடம் இருந்து, சாமர்த்தியமாக செயல்பட்ட மாமியார் அந்த பிஸ்டலை பிடுங்கி ஜன்னல் வழியாக வெளியே வீசினார். இதனால் ஆத்திரமடைந்த ஷைலா, தான் மறைத்து வைத்திருந்த பெப்பர் ஸ்ப்ரேவை அவர்கள் முகத்தில் அடித்து நிலைகுலையச் செய்துள்ளார். கண்கள் எரியத் தொடங்கி அவர்கள் செயலிழந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஷைலா, தான் கொண்டு வந்த பெரிய கத்தியால் சாதனாவை சரமாரியாக குத்தி படுகொலை செய்துள்ளார். இந்த தாக்குதலில் சாதனாவின் முகம் அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைக்கப்பட்டது காண்போரை உலுக்கியுள்ளது.

   

தகவலறிந்து விரைந்து வந்த வாலுஜ் காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அங்கேயே பதுங்கியிருந்த ஷைலாவை கைது செய்தனர். விசாரணையில், ஷைலா ஏற்கனவே கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதும், மகேந்திரா மீது பண மோசடி மற்றும் திருமண மோசடி புகார்களை அளித்திருந்ததும் தெரியவந்தது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தபோதே, பழிவாங்கும் நோக்கில் இந்த திட்டமிட்ட கொலையை அவர் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

   

இந்த கொடூரமான தாக்குதலில் ஷைலாவுக்கும் காயம் ஏற்பட்டதால் அவர் தற்போது போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். பட்டப்பகலில் ஒரு குடியிருப்பின் உள்ளேயே புகுந்து இத்தகைய படுபாதகச் செயலை அரங்கேற்றியது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு டீனேஜ் குழந்தைகளின் தாயான சாதனா உயிரிழந்திருப்பது, அந்த குடும்பத்தையே மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.