“கணவனை கொன்று புதைத்த மனைவி” – இரவோடு இரவாக நடந்த பயங்கரம்… காதலனுடன் சேர்ந்து கணவனை போட்டுத்தள்ளிய கொடூரம்…!

By Nanthini on சித்திரை 23, 2026

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொடூரமாகக் கொலை செய்து புதைத்த மனைவிக்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் ராஜசேகர் (30) மற்றும் இந்து சன்னி (33) தம்பதியினர் ஓசூர் அக்ரஹாரம் பகுதியில் வசித்து வந்தனர். அப்போது இந்துவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த லிண்டோ (38) என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

தங்களது சட்டவிரோத உறவுக்கு ஜஸ்டின் இடையூறாக இருப்பார் என்று கருதிய இருவரும், அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டனர். கடந்த 2017-ஆம் ஆண்டு ஒரு நாள் இரவு, வேலை முடிந்து வீடு திரும்பிய ஜஸ்டினை, இந்து தனது காதலன் லிண்டோவின் உதவியுடன் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். எவருக்கும் சந்தேகம் வராத வகையில், அன்று இரவே அவரது உடலை மத்திகிரி சுடுகாட்டுப் பகுதியில் ரகசியமாகப் புதைத்துவிட்டு, இந்து எதுவுமே தெரியாதது போல் சாதாரணமாக வாழ்ந்து வந்துள்ளார்.

   

நீண்ட நாட்களாக ஜஸ்டினை காணாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து கேட்டபோது, இந்து முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்களின் தகவலின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தியதில், கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்து மற்றும் லிண்டோவை கைது செய்த போலீஸார், அவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து ஜஸ்டினின் உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

   

ஓசூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், நீதிபதி சந்தோஷ் நேற்று (ஏப்ரல் 21) அதிரடித் தீர்ப்பு வழங்கினார். குற்றம் நிரூபிக்கப்பட்ட இந்து மற்றும் லிண்டோ ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். கள்ளக்காதலுக்காகக் கணவனைக் கொன்று புதைத்த விவகாரத்தில் நீண்ட போராட்டத்திற்குப் பின் நீதி கிடைத்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.