காலையிலேயே ஜனநாயகக் கடமையை ஆற்றினார் சூப்பர்ஸ்டார்.. மகள் சௌந்தர்யாவுடன் வந்து வாக்களிப்பு..!!

By Soundarya on சித்திரை 23, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு, தனது மகள் சௌந்தர்யாவுடன் நேரில் வந்த அவர், வரிசையில் நின்று தனது வாக்கினைப் பதிவு செய்தார். பின்னர் மை வைக்கப்பட்ட விரலைக் காட்டி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.

வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், அனைவரும் தவறாமல் வந்து தங்களது வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும் என்று பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். சூப்பர்ஸ்டாரின் வருகையை ஒட்டி அந்தப் பகுதியில் ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ரஜினிகாந்தின் இந்த வருகை அந்த வாக்குச்சாவடியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.