மதுபோதை தகராறைத் தடுத்து நிறுத்த முயன்ற 38 வயது சமையல் கலைஞர் சுமன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் விழிஞ்சம் பகுதியில் உள்ள ஒரு மதுக்கடைக்கு வெளியே இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. மதுபோதையில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட கும்பலைச் சமாதானப்படுத்த சுமன் முயன்றுள்ளார். அப்போது அச்சு மற்றும் அனந்து ஆகிய இரு சகோதரர்கள் சுமனை விரட்டிச் சென்று சாலையில் வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். சுமன் உதவி கேட்டு அலறியும் அங்கிருந்தவர்கள் உதவி செய்யவில்லை. மாறாக, அவர்களின் நண்பர்கள் இந்தக் கொடூரத் தாக்குதலைத் தங்கள் கைபேசியில் வீடியோ எடுத்துக்கொண்டு வேடிக்கை பார்த்துள்ளனர்.
🚨KERALA SHOCKER: Good Samaritan Beaten to Death in God’s Own Lands
In Vizhinjam, Thiruvananthapuram, a 38-year-old cook named Suman was brutally killed after he tried to mediate a drunken fight outside a bar.
Two brothers, Achu and Ananthu, chased and mercilessly assaulted… pic.twitter.com/GD9VyD0ICd
— Ramesh Tiwari (@rameshofficial0) April 21, 2026
இந்தக் கடுமையான தாக்குதலில் சுமனினுடைய நுரையீரல் சிதைந்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், முக்கியக் குற்றவாளிகளான இரு சகோதரர்கள் உட்பட நான்கு பேரையும் கைது செய்துள்ளனர். தற்போது அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஒரு நல்ல எண்ணத்தில் உதவி செய்ய வந்தவர் இப்படியாகக் கொல்லப்பட்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
