அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் துறைமுகங்களைச் சுற்றி அமெரிக்க கடற்படை கடுமையான முற்றுகையை (Blockade) ஏற்படுத்தியுள்ளது. இந்த முற்றுகையையும், அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி ‘சில்லி சிட்டி’ (Silly City) என்ற ஈரானிய எண்ணெய் கப்பல் பத்திரமாக ஈரான் கடற்பகுதியைச் சென்றடைந்துள்ளது. அமெரிக்காவின் மிரட்டல்களுக்குப் பணியாமல், தனது கண்காணிப்பு அமைப்புகளை (Tracker) ஆன் செய்தபடியே இந்தக் கப்பல் சர்வதேச நீர்நிலைகளைக் கடந்து சென்றுள்ளது அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடனான தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் புதன்கிழமை_ ( இன்று) மாலையுடன் முடிவடைவதாகவும், அதை மேலும் நீட்டிக்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாகச் சரியான உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஈரான் மீது கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்தச் சூழலில் ஈரானிய கப்பல் அமெரிக்க முற்றுகையை மீறியிருப்பது, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
