“குட்பை ஆப்பிள்…” டிம் குக் விலகல்…. 700 கோடி சம்பளத்தில் வாரிசாக வரும் ஜான் டெர்னஸ் யார்..?

By Devi Ramu on சித்திரை 21, 2026

Spread the love

தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக, அந்த நிறுவனத்தில் 25 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஜான் டெர்னஸ் புதிய சிஇஒ-வாக வரும் செப்டம்பர் 1-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். 2011-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸிற்குப் பிறகு ஆப்பிளை வழிநடத்திய டிம் குக், நிறுவனத்தின் சந்தை மதிப்பை 4 ட்ரில்லியன் டாலராக உயர்த்திய பெருமையுடன் தற்போது நிர்வாகத் தலைவர் பதவியை ஏற்கவிருக்கிறார்.

புதிய தலைவராகப் பொறுப்பேற்க உள்ள 50 வயதான ஜான் டெர்னஸ், இதுவரை ஆப்பிளின் ஹார்ட்வேர் இன்ஜினியரிங் பிரிவின் மூத்த துணைத் தலைவராக இருந்து ஐபோன் மற்றும் மேக் போன்ற முக்கியத் தயாரிப்புகளை வடிவமைத்தவர். இவரது ஆண்டுச் சம்பளம் இந்திய மதிப்பில் சுமார் 700 கோடி ரூபாய் (74.6 மில்லியன் டாலர்) இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. கூகுள் போன்ற நிறுவனங்களின் ஏஐ (AI) சவால்களை எதிர்கொண்டு, ஆப்பிள் நிறுவனத்தை அடுத்தகட்டப் புரட்சிகரமான தயாரிப்புகளை நோக்கி ஜான் டெர்னஸ் வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.